Gavitha / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLIIT தனது பட்டமளிப்பு விழாவை, அண்மையில் SLIIT மாலபே கம்பஸ் வளாகத்தில் முன்னெடுத்திருந்தது.
மூன்று அமர்வுகளாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் போது, Bachelor’s, Master’s degrees மற்றும் Postgraduate Diplomas ஆகியவற்றை பூர்த்தி செய்த மாணவர்களக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. மாணவர்கள் மத்தியில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களும் இந்த பட்டமளிப்பு விழாவின் போது கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக, கல்வி அமைச்சர் பேராசிரியர். ஜி.எல். பீரிஸ் கலந்து கொண்டார். Laughs குரூப் தவிசாளர் தேசபந்து டபிள்யு.கே.எச். வேகாபிட்டிய, டயலொக் அக்சியாடா குரூப் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க ஆகியோரும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஒன்றுகூடியிருந்தவர்கள் மத்தியில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றும் போது, 'இன்று பட்டம் பெற்ற அனைவரைக்கும் நான் வாழ்த்துத் தெரிவிக்கின்றேன். நாட்டின் உயர் கல்வித்துறைக்கு தொடர்ச்சியாக ஆற்றி வரும் பங்களிப்பு உண்மையில் மிகவும் பெறுமதி வாய்ந்த சேவையாக அமைந்துள்ளது.' என்றார்.
'நாட்டின் கல்வி அமைச்சர் எனும் வகையில், உலகின் புகழ்பெற்ற 30 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இந்தக் கல்வியகம் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையில் பெருமைக்குரிய விடயமாகும். இது உண்மையில் சாதனைக்குரிய விடயமாகும். நாட்டின் சகல உயர் கல்விச் சேவைகளை வழங்கும் கல்வியகங்களுக்கும் முன்மாதிரியாக அமைந்திருக்கும் என நான் நம்புகின்றேன்.' என மேலும் குறிப்பிட்டார்.SLIIT இன் உப வேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர். லலித் கமகே கருத்துத் தெரிவிக்கையில், 'இன்று பட்டம் பெறும் சகல பட்டதாரி மாணவர்களுக்கும் நான் வாழ்த்துத் தெரிவிக்கின்றேன். உங்களின் வாழ்வில் இது முக்கியமான தருணமாகும். உங்களில் பலருக்கு இந்தக் கல்வியகம் இரண்டாவது இல்லமாக அமைந்திருந்ததுடன், SLIIT இல் நீங்கள் கல்வி பயின்ற காலப்பகுதியில் நீங்கள் உண்மையில் மகிழ்ச்சியுடன் உங்கள் பொழுதை செலவிட்டிருப்பீர்கள் என நான் கருதுகின்றேன். நீங்கள் தற்போது இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த மனித வளங்களில் ஒன்றாக அமைந்துள்ளீர்கள். உங்களின் தனி முயற்சியால் மாத்திரம் நீங்கள் வெற்றியீட்டியிருக்க முடியாது, உங்கள் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் குடும்பத்தாரும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவிக்க சிறிது நேரத்தை ஒதுக்குங்கள்.' என்றார்.
2020 செப்டெம்பர் பட்டமளிப்பு விழாவின் போது, தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், கணனி, பொறியியல், சந்தைப்படுத்தல், மனித வளங்கள் முகாமைத்துவம், எந்திரவியல் பொறியியல் மற்றும் கணக்கீடு மற்றும் நிதியியல் துறைகளில் BSc பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. தகவல் தொழில்நுட்பம், தகவல் நிர்வாகம் மற்றும் தகவல் கட்டமைப்புகள் ஆகியவற்றில் MSc பட்டங்களும், இலத்திரனியல் துறையில் MPhil பட்டங்களும் வழங்கப்பட்டிருந்தன.
10 minute ago
15 minute ago
26 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
26 minute ago
39 minute ago