2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

SLT ஸீரோ வன் விருதுகள் தெரிவு ஆரம்பம்

Niroshini   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

“SLT ஸீரோ வன் விருதுகள்” சம்பந்தமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் கடைசித் திகதி 2017 ஜனவரி 15இல் முடிவடைந்ததை அடுத்து, டிஜிட்டல் ஊடகத்துறையில் அதி உன்னத நிலைமையை அங்கிகரித்து, பாராட்டி முன்னணி நிலைக்கு வந்துள்ள வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா டெலிகொம் அறிவித்துள்ளது.   

ஸ்ரீலங்கா டெலிகொம்மினால் ஒழுங்கமைக்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில், சம்பந்தப்பட்ட துறைகளில் உந்துசக்தியையும், அங்கிகாரத்தையும் பெறுவதற்கான முதலாவது நிகழ்வாக அமைந்துள்ளது.   
பெறுமதி மிக்க மிகச்சிறந்த விருதுகளில் பாரிய அளவிலான எதிர்பார்ப்பு அடங்கியுள்ளது. தனிநபர்கள், முகவர் நிலையங்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள். வர்த்தக நாமங்கள், பல்தேசியத்தினர் மற்றும் மாணவர்கள் உட்பட பெருந்தொகையானோர் இதில் பங்குபற்ற முடியும். இவர்கள் அனைவருக்கும் சம சந்தர்ப்பங்களும், டிஜிட்டல் ஊடகத்துறையில் தங்களது பங்களிப்பைக் காண்பிப்பதற்கான சகல அனுசரணைகளையும் வழங்கும் மேடையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.   

சுதந்திரமான நடுவர் குழுவொன்றை ஒழுங்கமைப்புக் குழு தெரிவு செய்துள்ளது. இதில் நிபுணர்கள், இந்தத்துறையின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த கல்விமான்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இத்தகையப் பெறுமதி வாய்ந்த நடுவர் குழு, பரிசு பெறுவதற்கு மிகவும் தகுதியுடையவர்களே அதனைப் பெறுவார்கள் என்பதை நிச்சயிக்கவென ஒவ்வொரு பிரிவிலும் சிறந்தவர்களுள் அதிசிறந்தவர்களைத் தெரிவு செய்யவிருக்கிறது.   
தெரிவுக் குழுவில் சம்பந்தப்பட்ட உயர் தொழில் மற்றும் கைத்தொழில் என்பனவற்றில் அங்கிகாரத்தைப் பெற்றுள்ள உள்ளுர் மற்றும் சர்வதேச நிபுணர்கள் அடங்கியுள்ளனர்.   

160 வருட காலமாக இலங்கையின் தொலைத்தொடர்புத் தொழிலில் முன்னோடியாகவுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம், கடந்த பல வருடங்களில் தொலைத்தொடர்பிலும், டிஜிட்டல் அமைப்பிலும் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் பல தடவைகள் மீள் முதலீடுகளைச் செய்துள்ளது. இலங்கை மக்கள் அனைவருக்கும் ICTஇன் பூரண நன்மைகளை வழங்குவதில் அர்ப்பணித்துப் பணிபுரியும் ஸ்ரீ லங்கா டெலிகொம், இன்றைய தின்துக்கும் நாளைய தினத்துக்கும் இடையிலான கால எல்லையைக் குறைப்பதற்கு உத்தேசித்துள்ளது. இதனடிப்படையில் டிஜிட்டல் ஸ்ரீலங்காவின் உதயத்துக்கு பங்களிப்பை வழங்குவது அதன் நோக்கமாகும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X