S.Sekar / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் இரு இளம் ரியாலிட்டி நட்சத்திரங்களான ஃபலன் அன்ட்ரியா மற்றும் நுவந்திகா சேனாரட்ன ஆகியோர் தேசிய தொலைத்தொடர்பாடல் சேவைகள் வழங்குநரான SLT-Mobitel இன் வர்த்தக நாமத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பரந்தளவு இளம் தலைமுறையினருடன் அதிகளவு ஈடுபாட்டை பேண SLT-Mobitel எதிர்பார்க்கும் நிலையில், ஃபலன் மற்றும் நுவந்திகா ஆகியோர் வர்த்தக நாமத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். புகழ்பெற்ற உள்நாட்டு ரியாலிட்டி இசை நிகழ்ச்சியில் ஃபலன் முதலாமிடத்தையும், நுவந்திகா இரண்டாமிடத்தையும் வெற்றியீட்டியிருந்தனர். தமது இசைத் திறமையால் பல மில்லியன் கணக்கான இலங்கையர்களின் உள்ளங்களை இவர்கள் வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஒன்றிணைக்கப்பட்ட வர்த்தக நாமம் எனும் வகையில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை பின்பற்றுவதற்கு தேசத்துக்கு வலிமையளிக்கும் SLT-Mobitel, தமது வர்த்தக நாமமான SLT-MOBITEL இன் தூதுவர்களாக நியமிப்பதற்கு ஃபலன் மற்றும் நுவந்திகா ஆகியோரை மிகவும் பொருத்தமானவர்களாக இனங்கண்டிருந்தது. ஃபலன் மற்றும் நுவந்திகா ஆகியோர் தமது உறுதியான, எதிர்பார்ப்புகள் நிறைந்த மற்றும் யுவதிகளை வழிநடத்துவதில் தமது நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளதுடன், அவர்கள் தமக்கென உருவாக்கியுள்ள ரசிகர்கள் மத்தியில் முன்மாதிரியானவர்களாக திகழ்கின்றனர். ஃபலன் மற்றும் நுவந்திகா ஆகியோரின் புதிய நிலைகளினூடாக, பல்வேறு திட்டங்களில் அவர்கள் ரசிகர்களுடன் ஈடுபாட்டை பேண வழிவகுக்கும்.
இவர்களின் நியமனம் தொடர்பாக ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், 'மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஒன்றிணைக்கப்பட்ட வர்த்தக நாமம் எனும் வகையிலும், இந்த டிஜிட்டல் யுகத்தில் மாற்றத்தையும் புத்தாக்கத்தையும் ஊக்குவிக்க முக்கியத்துவம் வழங்கும் நிலையில், எம் நாட்டின் இளைஞர்கள் உலகளாவிய ரீதியில் இடம்பெறும் டிஜிட்டல் அமுலாக்கங்களுடன் தம்மையும் வளர்த்துக் கொள்வதில் அதிகளவு நாட்டம் காண்பிப்பதை அவதானிக்க முடிகின்றது. ஃபலன் அன்ட்ரியா மற்றும் நுவந்திகா சேனாரட்ன போன்ற புதிய இளம் முகங்களை எம்முடன் இணைத்துள்ளதனூடாக, இலங்கையின் பொது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதுடன், அவர்களின் இளம் ரசிகர்கள் மத்தியில் உண்மையான முன்மாதிரியானவர்களாகவும் திகழ்கின்றமையை மேலும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். இவர்கள் உற்சாக்ம், எதிர்பார்ப்பு, இளமை மற்றும் திறமையானவர்கள். இசை மற்றும் களியாட்டம் போன்ற துறைகளில் இவர்களின் பங்களிப்பு என்பது, அவர்களின் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. இவர்களுடன் SLT-Mobitel ஐச் சேர்ந்த நாம் சிறந்த பங்காண்மையை பேண எதிர்பார்க்கின்றோம்.' என்றார்.
8 minute ago
11 minute ago
21 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
21 minute ago
23 minute ago