2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

SLT-MOBITEL நிலைபேறான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகத்திலும் சூழலிலும் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் அங்கமாக, SLT-MOBITEL இனால் பல்வேறு நிலைபேறான சூழல், சமூக, ஆளுகை (ESG) நடவடிக்கைகள், கம்பளை, ஜினராஜ மகா வித்தியாலயத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் மூன்று திட்டங்கள் அடங்கியிருந்ததுடன், பல பெறுமதி வாய்ந்த பங்காளர்களுடன் SLT-MOBITEL கைகோர்த்து, அந்த சமூகத்தில் நீடித்து நிலைத்திருக்கும் தாக்கத்தையும், நிலைபேறான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. செயற்திட்டங்களில் STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) தொடர்பான கல்வி விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுப்பது, மாணவர் தொழில்முயற்சியாண்மையை ஏற்படுத்துவது, “மனமிருந்தால் புத்தகமொன்றை வழங்குங்கள்” எனும் தொனிப்பொருளில் புத்தக நன்கொடைத் திட்டம் வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் வகையிலும், ஒகில்வி பொது உறவுகள் ஸ்ரீ லங்கா உடன் இணைந்து மர நடுகைத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

SLT சார்பாக இந்நிகழ்வில் R1-பிராந்திய செயற்பாடுகள் பொது முகாமையாளர் அனுருத்த ரத்நாயக்க மற்றும் பொது உறவுகள் பிரதி பொது முகாமையாளர் நிலந்தி ஜயகொடி ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பாடசாலையின் அதிபர், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன், ஒகில்வி பொது உறவுகள் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் அதிகாரிகள், கம்பளை SLT-MOBITEL வாடிக்கையாளர் கழகத்தின் அங்கத்தவர்கள் மற்றும் SLT-MOBITEL அதிகாரிகள் மற்றும் STEMUP மையத்தின் தன்னார்வ செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

“நாடு முழுவதிலும் சுவாசத்தையும், உரத்தையும் பயிரிடுவோம்” எனும் நாமத்தின் கீழ் கம்பளையில் மர நடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது SLT-MOBITEL இன் சூழல் பாதுகாப்பு செயற்பாடுகளுக்கான அர்ப்பணிப்பின் அங்கமாக அமைந்திருந்தது. வன அழிப்பை நிவர்த்தி செய்வது மற்றும் பசுமையான மற்றும் ஆரோக்கியமான சூழல் கட்டமைப்புக்கு பங்களிப்பு வழங்குவது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் SLT-MOBITEL இனால் 1700 மரங்கள் இதுவரையில் நடப்பட்டுள்ளதுடன், மொனராகலை, உமந்தாவ, அனுராதபுரம், குண்டசாலை, மீரிகம மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .