2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

SLT-MOBITEL பொசொன் விளக்கீட்டு பூஜையில் பங்கேற்பு

Freelancer   / 2025 ஜூன் 20 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கலாசார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், SLT-MOBITEL, அண்மையில் நடைபெற்ற புனித பொசொன் விளக்கீட்டு பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தது.

இலங்கை அரசாங்கத்தினால் மிஹிந்தலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வினூடாக, இலங்கையின் ஆழமான சமய பாரம்பரியம் வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த ஆயிரக் கணக்கான யாத்திரிகர்களை கவர்ந்திருந்தது. இந்த ஆண்டின் விளக்கீட்டு பூஜை நிகழ்வில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்றிருந்தார்.

வலையமைப்பை ஏற்படுத்துவதற்கு அப்பாலான தனது அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், நிலைபேறாண்மை, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் சமூக வலுவூட்டல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் செயற்பாடுகளில் SLT-MOBITEL தன்னை ஈடுபடுத்திய வண்ணமுள்ளது.

பிரதிபலிப்பு, ஒற்றுமை மற்றும் ஆன்மீக அர்ப்பணிப்பு ஆகியன நிறைந்த பொசொன் பௌர்ணமியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், SLT-MOBITEL இனால் யாத்திரிகர்களுக்கு அனுபவத்தை மேம்படுத்துவதற்கான பிரதான உட்கட்டமைப்பு ஆதரவு வழங்கப்பட்டிருந்தது. நிறுவனத்தின் சூழல், சமூக மற்றும் ஆளுகை அர்ப்பணிப்புக்கமைய, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘Data Dansala’ ஊடாக, பங்கேற்றிருந்தவர்களுக்கு டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு, சமயசார் நிகழ்வுகளில் ஈடுபடுகையில் தமது அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்திருந்தது.

மேலும், அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு இலவச பேருந்து போக்குவரத்து சேவையையும் SLT-MOBITEL முன்னெடுத்திருந்தது. அதனூடாக பெருமளவானோருக்கு இந்த விளக்கீட்டு பூஜையில் பங்கேற்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது.

சமூக சென்றடைவை வலிமைப்படுத்தி, SLT-MOBITEL இனால் ஐஸ்கிறீம் தன்சல் வழங்கும் நிகழ்வும் அதன் அனுராதபுர கிளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனூடாக யாத்திரிகர்கள் மத்தியில் குதூகலம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

பொசொன் விளக்கீட்டு பூஜை நிகழ்வு, யாத்திரிகர்களை ஈடுபடுத்தியிருந்த நிகழ்வாக அமைந்திருந்ததுடன், நவீன டிஜிட்டல் அணுகலுடன் அனுகூலம் பெறக்கூடிய வகையிலும் அமைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .