S.Sekar / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுண்வியாபாரங்களுக்கான இணைப்புத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் 'உங்கள் கனவுக்கு சக்தி' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக SLT-MOBITEL அறிவித்துள்ளது. நுண்வியாபாரங்களுக்கு அவசியமான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வு பக்கேஜ்களைக் கொண்டதாக இந்தத் திட்டம் அமைந்திருக்கும்.

நுண்வியாபார பிரிவுகளின் இணைப்புத் தேவைகளை புரிந்து கொண்டு, இந்தத் திட்டத்தினூடாக அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகள் வழங்கப்படும். அதன் பிரகாரம், பரந்தளவு சந்தைப் பிரிவுகளுக்கு பொருத்தமான தொடர்பாடல், வியாபார வலைப்பின்னல், க்ளவுட் தொழில்நுட்பம், களியாட்டம் மற்றும் IoT, தொடர்பாடல் சாதனங்கள் மற்றும் வியாபார உட்கட்டமைப்பு சேவைகள் போன்றன நுண் வியாபாரங்களுக்கு SLT-MOBITEL இன் குரல் மற்றும் மொபைல் தொலைபேசி, 4G LTE, SLT புரோட்பான்ட், SLT Fibre மற்றும் Peo TV சேவைகள் போன்ற தயாரிப்புகள் மற்றும் சேவைகளினூடாக வழங்கப்படும்.
ஸ்ரீ லங்கா ரெலிகொம் சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள் விருத்தியின் பொது முகாமையாளர் சஞ்ஜீவ ஜயமஹ கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கையின் பொருளாதாரத்தில் நுண் வியாபாரங்கள் என்பது உறுதியான பங்களிப்பை வழங்குகின்றன. மில்லியன் கணக்கான மக்களின் தினசரி கொடுக்கல் வாங்கல்களுக்கு பங்களிப்பு வழங்கப்படுகின்றது.
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான ஸ்ரீ லங்கா ரெலிகொமின் இணைப்புத் தீர்வுகள் தொடர்பான முழுமையான அனுகூலத்தை இவர்கள் பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.
SLT-MOBITEL வர்த்தக நாம ஒன்றிணைப்பினூடாக எமது வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கக்கூடியதாக இருக்கும். வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த நுண் வியாபாரங்களுக்கு தமது வியாபார செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான இணைப்புத் தீர்வுகளை தற்போது அணுகுவதை உறுதி செய்வதாக இருக்கும்.' என்றார்.
களியாட்டம் மற்றும் விருந்தோம்பல், நவநாகரீகம் மற்றும் அழகியல், தினசரி அத்தியாவசிய பொருட்கள், மருத்துவம் மற்றும் சுகாதார பராமரிப்பு, கல்வி, விசேட நிகழ்வு சேவைகள், நிதிச் சேவைகள், வணிகம் மற்றும் மென்பொருள் விருத்தி, நிபுணத்துவ சேவைகள், நிர்மாண உதவிகள் மற்றும் போக்குவரத்து மற்றும் விநியோக சேவைகள் போன்ற துறைகளைச் சேர்ந்த நுண் வியாபாரங்கள் SLT இன் விசேட பக்கேஜ்களினூடாக அனுகூலம் பெறக்கூடிய வகையில் அமைந்திருக்கும்.
தேசத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை வழங்குநர் எனும் வகையில், தொற்றுப் பரவலிலிருந்து நாட்டை மீட்டு, மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்கும் நாடு முழுவதையும் சேர்ந்த நுண் வியாபாரங்களின் இணைப்புத் திறனை மேம்படுத்தி, அதனூடாக தேசத்தின் வளர்ச்சியில் அந்நிறுவனங்களின் பங்களிப்பை மேம்படுத்தும் ஊக்குவிப்பை வழங்குகின்றது.
இலங்கையின் பொருளாதாரத்தை புதிய வழமைக்கேற்ப மீளக் கட்டியெழுப்புவதும், டிஜிட்டல் மயமாக்கத்துக்கான வலையமைப்பு தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலும், கீழ் மட்டத்தில் காணப்படும் வியாபாரங்களுக்கு இணைப்புத் தீர்வுகளை வழங்கும் பணிகளை ஸ்ரீ லங்கா ரெலிகொம் மேற்கொள்கின்றது.
3 minute ago
11 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
16 minute ago
1 hours ago