Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 05 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஹோட்டல்கள் சங்கம் (THASL), கல்வி அமைச்சு மற்றும் ஷன்கிரி-லா ஹோட்டல் என்பனவற்றுடன் இணைந்து, பாடசாலை அதிபர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்றை அண்மையில், கொழும்பு ஷன்கிரி-லா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது.
தொழில்நுட்பக் கல்வியை நாடு தழுவிய ரீதியில் கற்பிக்கும் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 250க்கும் அதிகமான பாடசாலை அதிபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியானது, இரண்டு பிரிவுகளாக நடைபெற்றதுடன், முதலாவது கட்டத்தில், இத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களின் குழுக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதன்போது, இலங்கையில் திறமை தேவைப்படும் துறைகளில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் பற்றியும் அடுத்த கட்டமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் இளம் சந்ததியினருக்கு விருந்தோம்பல் துறையில் காணப்படும் எல்லையற்ற வாய்ப்புகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்நியச் செலாவனியைப் பெற்றுத் தரும் இலங்கையின் மூன்றாவது மிகப்பெரிய மற்றும் நிகர அந்நியச் செலாவணியை நாட்டுக்குக் கொண்டுவரும் இரண்டாவது மிகப்பெரிய துறையான சுற்றுலாத் துறையானது, நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதில் மாபெரும் பங்கை ஆற்றியுள்ளது.
அதன் போட்டிமிக்க அம்சங்கள் பற்றி நாட்டின் இளம் சந்ததியினர் அறிந்திருக்காமை கவலைக்குரிய விடயமாகும். ஹோட்டல் துறையில் காணப்படும் முடிவற்ற இந்த வாய்ப்புகள் தொடர்ச்சியாக மாற்றமடையக்கூடிய மற்றும் சவால்மிக்க தன்மை என்பன உள்நாட்டு இளம் சந்ததியினரை துறைக்குள் ஈர்த்து, சிறந்த நன்மைகளை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க உதவும்.
இதற்காக ஈடுபாட்டுடன் செயற்பட்டு வரும் இலங்கை ஹோட்டல்கள் சங்கம் (THASL), நாட்டின் ஹோட்டல் தொழிற்துறையின் முழுமையான ஒன்றிணைப்பு நிறுவனமாகும் என்ற ரீதியில், மிக சிறந்த திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், இத்துறையில் ஈடுபட்டுள்ள இளம் சந்ததியினருக்குக் கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கவும், மேலும், விருந்தோம்பல் துறையில் காணப்படும் எல்லையற்ற வாய்ப்புகள் பற்றிய தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் வழிவகுக்கிறது.
THASL - அதன் முதல் கட்டமாக, ‘விருந்தோம்பல் துறையில் 2017 ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்’ என்ற தலைப்பின் கீழ், நாடு தழுவிய ரீதியிலான போட்டியொன்றை ஏற்பாடு செய்திருந்தமை விசேடம்சமாகும்.
அதில் பங்குபற்றியவர்கள் ஒன்பது பிரிவுகளாக மதிப்பீடு செய்யப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட ஹொட்டல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆயிரக்கணக்கான திறமை வாய்ந்த இளம் பங்குபற்றுநர்கள் இதில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெற்றது.
2 minute ago
10 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
10 minute ago
55 minute ago
2 hours ago