2021 மே 11, செவ்வாய்க்கிழமை

Velona Cuddles அப்ளிகேஷன் அறிமுகம்

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அணையாடை (Diaper) வர்த்தக நாமமான Velona Cuddles, அணையாடைகளைச் சந்தா முறையில் பெற்றுக்கொள்வதற்கான புத்தம் புதிய அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுடன் பல பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான தீர்வாக இந்த அப்ளிகேஷன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த அப்ளிகேஷனானது, தாமதமான தொடக்க தெரிவுடன் (delayed start option) வருவதால், பெற்றோர் தாம் எதிர்ப்பார்க்கும் பிரசவ தினத்துக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னதாகவே ஒத்திசைவாகத் தொடக்க தினத்தை தெரிவு செய்யமுடியும். இந்த அப்ளிகேஷனின் மற்றோர் அம்சம் என்னவெனில், கணக்கின் டேஷ்போர்ட் ஊடாக உங்கள் குழந்தைகளுக்கென பல புரொபைல்கள் மற்றும் சந்தாக்களை உருவாக்க வாய்ப்பளிக்கிறது. மேலும், பெற்றோர்கள் தமது குழந்தைக்கு மேம்பட்ட செளகரிய மட்டத்தை உறுதி செய்யும் பொருட்டு, அவர்களது உருவத்துக்கு ஏற்ற சிறப்பான அளவைத் தெரிவுசெய்ய வசதியாக “sizing slider” வழங்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X