Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2019 மே 30 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை டெக்ஸி சேவையில் புதிதாக இணைந்த YOUCAB டெக்ஸி சேவைக்கும், “அகில இலங்கை டெக்ஸி உரிமையாளர்கள், சாரதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் சங்கம்” (AIAPROD) ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த நிகழ்வில் YOUCAB டெக்ஸி சேவையின் பங்காளர்களான இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கங்கார ஆகியோரும் AIAPROD இன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
AIAPROD ஆனது 2007இன் 7ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், 2018ஆம் ஆண்டு ஜுன் 3ஆம் திகதி, பதிவு செய்யப்பட்டதுடன் இதன் தலைவராக சரித் அத்தன்பொல உள்ளார். அகில இலங்கை டெக்ஸி உரிமையாளர்கள், சாரதிகளின் குடும்பத்தவரின் நலன்களுக்காகவும் அவர்களது உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் இந்தச் சங்கம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
YOUCAB டெக்ஸி app ஐ பயன்படுத்தி இலங்கையர்களுக்கு தமது பிரயாண சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். தமது பிரயாண பங்காளருக்கு சமூகத்தில் நிலவும் எதிர்மறையான கருத்துக்களை நீக்கி அவர்கள் வழங்கும் சேவைக்கு சிறந்த வரவேற்பு கிடைக்கும் வகையில் தமது சேவைகளை கொண்டு நடத்த YOUCAB நடவடிக்கை எடுக்கும். பயண பங்களாருக்கும், பயணிக்கும் இடையிலான சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்தவும் YOUCAB எப்போதும் நடவடிக்கை எடுக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
38 minute ago
41 minute ago
1 hours ago