2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

Dash துணி துவைக்கும் சவர்க்காரம் சந்தைக்கு அறிமுகம்

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


உயர்ரக தரத்தை கொண்ட உற்பத்திகளை மக்களுக்கு வழங்கி வருகின்றதும் துப்பரவு செய்யும் வர்த்தக நாமத்தை கொண்டதுமான dash இன் புதிய துணி துவைக்கும் சவர்க்காரம் அண்மையில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. dash சவர்க்காரத்தின் விசேட அம்சம் என்னவெனில் அது TFM தரத்தை கொண்டதாக அமைந்துள்ளமையாகும். 
 
TFM எனப்படும் Total Fatty Matter என்பது சவர்க்காரத்தின் தரத்தை அளக்க பயன்படுத்தப்படும் அளவீடாகும். அத்துடன் சவர்க்காரத்தின் எடையுடன் ஒப்பிடுகையில் காணப்படும் முழு கொழுப்பின் அளவையும் TFM மூலம் அறிந்துகொள்ளலாம். இலங்கை தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் 554 ஆம் இலக்க தரத்துக்கமைய துணி துவைக்கும் சவர்க்காரத்தில் 59 வீதம் TFM அடங்கியிருத்தல் வேண்டும். எனினும் அநேக நிறுவனங்கள் துணி துவைக்கும் சவர்க்காரம் என்ற பெயரில் உற்பத்தி செய்யும் சவர்க்காரத்தில் TFM தரம் இல்லை என்பதை மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  
 
சவர்க்காரம் உற்பத்தி செய்வது மிக கடினமான காரியமல்ல என்பதுடன் அதனை இலகுவாக உற்பத்தி செய்ய முடியும். இதனால் தொன்றுதொட்டே சவர்க்கார பாவனையில் மக்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். நீண்ட வரலாற்றை கொண்ட சவர்க்காரத்தில் காலத்திற்கேற்ப தரத்தில் உயர்ரகம் காணப்பட வேண்டியது அவசியமானபோதிலும் நிகழ்காலத்தில் அத்தகைய தரத்தை கொண்ட உயர்ரக துணி துவைக்கும் சவர்க்காரம் சந்தையில் இல்லை.
 
சந்தைப்படுத்தல் பிரசாரத்தில் சவர்க்காரம் என காண்பிக்கப்படும் அநேகமானவற்றில் TFM தரம் குறைவாகவே உள்ளதுடன் அவை அனைத்திலும் துணி துவைக்கும் சவர்க்காரம் என குறிப்பிடப்படவில்லை. யாராவது இதனை உற்று பார்த்தால் அந்த உற்பத்திகளில் மிக சிறியதாக ஆங்கிலத்தில் Laundry Bar (லொன்ட்ரி பார்) அல்லது Detergent Soap (டிட்டர்ஜன்ட் சோப்) என்றே பொறிக்கப்பட்டிருக்கும். 
 
நீண்டகாலமாகவே சந்தையில் காணப்பட்ட அத்தகைய உற்பத்திகள் ஆரம்பம் முதலே உண்மையான தரத்தை கொண்ட சவர்க்காரமாக விளங்கியதா? இலாபத்தை நோக்கமாக கொண்டு குறைந்த TFM  தரத்தை கொண்டவையே சந்தைக்கு அறிமுகமாகின. 
 
உற்பத்தி தரம் தொடர்பாக எந்நேரமும் அதிக அக்கறை கொண்டுள்ள இலங்கை நிறுவனமான மல்டிகெமி இன்டர்நேஷனல் இந்த நிலைமையை புரிந்துகொண்ட பின்னர் மக்களுக்கு உயர்ரக தரத்தை கொண்ட TFM தரத்தில் தயாரிக்கப்பட்ட Dash துணி துவைக்கும் சவர்க்காரத்தை அறிமுகப்படுத்தியது. 
 
TFM அளவு 59 வீதமாக அமைந்திருந்தால் ஏற்படும் நன்மைகள்
- குறைந்தளவே கரைவதால் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும்.
- சுத்திகரிக்கும் தன்மை அதிகம் கொண்டது.
- அதிக அளவு துணிகளை துவைக்க முடியும்.
- அதிக நுரைகளை கொண்டுள்ளது.
- துணிகளுக்கு சேதம் இல்லை. 
 
TFM அளவு 59 வீதத்துக்கு குறைவாக அமைந்திருந்தால் ஏற்படும் தீமைகள்  
- விரைவில் கரைதல்.
- சுத்திகரிக்கும் அளவு குறைவு.
- தரமற்ற உற்பத்தி பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
- துணிகளை போன்றே கரங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தும்.
 
dash சவர்க்காரத்தை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் வைபவம் மல்டிகெமி நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் சமந்த குமாரசிங்கவின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்த வைபவத்திற்கு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த மல்டிகெமி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பொது முகாமையாளர் டிக்கிரி செனவிரத்ன, dash ஊடாக மக்களுக்கு புதிய துணி துவைக்கும் சவர்க்காரம் கிடைக்கப்போகின்றது. அதற்கமைய சந்தையில் காணப்படும் ஏனைய சவர்க்காரங்களுடன் புதிய தரத்துடன் வந்திருக்கும் சவர்க்காரத்தை ஒப்பிட்டு பார்த்து மக்களுக்கு தரத்தை அறிந்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.  
 
தேசிய சந்தைப்படுத்தல் முகாமையாளர் லசித்த வித்தானஆரச்சி கருத்து தெரிவிக்கையில், மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள உயர்ரக சுத்திகரிப்பு உற்பத்திகள் 25 வரை dash குறியீட்டு நாமத்தின் மூலம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 'dash கார் வொஷ்' வாகனங்களை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் திரவம் முன்னிலையிலுள்ளது. அதேநேரம்  'dash சேப்மெடிக்' துணி துவைப்பதில் புதிய புரட்சியானது.அத்துடன் 'dash ஸ்ரின் டைம் - எயார் ப்ரெஸ்னர்' , 'dash கொமொக்ஸ்' மலசலகூடங்களை சுத்திகரிப்பதற்கு பயன்படுத்தப்படும் தயாரிப்பு உள்ளிட்ட பல தயாரிப்புக்களை dash வழங்குவதாக லசித்த லியனஆரச்சி தெரிவித்தார்.
 
dash சவர்க்காரத்தை விநியோகிக்கும் மல்டிகெமி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு 20 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு dash துணி துவைக்கும் சவர்க்காரம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .