
IFS நிறுவனத்தின் வருடாந்த விளையாட்டு தினம் நிகழ்வு அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் போது, நிறுவனத்தின் ஊழியர்கள் நான்கு அணிகளில் பாரிய 'இரும்பு சிம்மாசனத்தை' (Iron Throne) வெல்வதற்காக போட்டியிட்டனர். பரதியன்ஸ், லென்னிஸ்டர்ஸ், ஸ்டார்க்ஸ் மற்றும் டார்கரின்ஸ் போன்ற நான்கு இல்லங்களுக்காக இவர்கள் போட்டியிட்டிருந்தனர். கொழும்பு ஹவலோக் மைதானத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, 'கேம் ஒப் த்ரோன்ஸ்' (Game of Thrones) எனும் தொலைக்காட்சித் தொடரினை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்ததுடன், சிறந்த குழுநிலை உணர்வையும் மேம்படுத்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் கிரிக்கெட், கூடைப்பந்தாட்டம், அம்பெய்தல், ரக்பி, கலப்பு அஞ்சல் ஓட்டப்போட்டி, கரம் மற்றும் பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் லென்னிஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றிருந்ததுடன், பரதியன்ஸ் அணியினர் இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டனர். டார்கரின்ஸ் மற்றும் ஸ்டார்க்ஸ் அணிகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பெற்றிருந்தன.
IFS பற்றி:
IFS என்பது சொத்துக்கள் முகாமைத்துவம், உற்பத்தி, களசேவை முகாமைத்துவம், விநியோகத் தொடர் முகாமைத்துவம் அல்லது செயற்திட்ட முகாமைத்துவம் போன்ற தொழிற்துறைகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு மென்பொருகளை வடிவமைத்து விநியோகிப்பதில் சர்வதேச ரீதியில் முன்னணியில் திகழும் நிறுவனமாகும். IFS ஆப்ளிகேஷன்ஸ், மாற்றமடைந்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதுடன், 1983ஆம் ஆண்டு முதல் துரித கதியில், அதிகளவு பயனை வழங்கக்கூடிய வகையில் குறைந்த செலவில் தொழிற்துறைகளுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.