2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

JAAF அமைப்புடன் ஹட்ச் இணைவு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 06 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஆடைத்தொழில்துறை என்பது, இலங்கைக்கு பல்வேறு வழிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறையாக அமைந்துள்ளது. தேசிய பொருளாதாரத்துக்கு பிரதான பங்களிப்பை வழங்குவதுடன், இலங்கை தேயிலையை தொடர்ந்து, நாட்டின் கீர்த்தி நாமத்தை சர்வதேசத்துக்கு கொண்டு சென்ற துறையாக விளங்குகிறது. மேலும், பெருமளவு தொழில் வாய்ப்பை வழங்கும் துறையாகவும் திகழ்கிறது.
 
ஆடைத்தொழில்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் மூலம் வழங்கப்படும் சேவையை கௌரவிக்கும் வகையில், JAAF அமைப்பு மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு போன்றவற்றுடன் இணைந்து நாடு முழுவதும் விழிப்புணர்வு திட்டமொன்றை முன்னெடுக்க ஹட்ச் முன்வந்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் ஆடைத்தொழில் துறையில் காணப்படும் சமூகநலன்புரி திட்டங்கள் மற்றும் இதர அனுகூலங்கள் குறித்து ஹட்ச் தனது வலையமைப்பைக் கொண்டுள்ள 25 மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. இந்த நடவடிக்கைக்காக நாடு முழுவதும் பரந்து காணப்படும் தனது 3G வலையமைப்பை பயன்படுத்த ஹட்ச் தீர்மானித்துள்ளது. 
 
இந்த நடவடிக்கை குறித்து ஹட்ச் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசா கருத்து தெரிவிக்கையில், 'ஆடைத்தொழில் துறையில் ஈடுபடும் பெருமளவானவர்களின் மத்தியில் ஹட்ச் அதிகளவு சந்தை பங்கை கொண்டுள்ளது. விசேடமாக எமது வலையமைப்பின் கட்டணங்கள் மிகவும் குறைவாக அமைந்துள்ளமை இதற்கு காரணமாகும். அத்துடன், இந்த துறையை சேர்ந்தவர்களுக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட வசதிகள் மற்றும் சலுகைகள் போன்றன அவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஆடைத்தொழில் துறையில் காணப்படும் அனுகூலங்கள் குறித்த செய்தியை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதன் மூலம் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வழிகாட்டியாக ஹட்ச் செயற்பட தீர்மானித்துள்ளது' என்றார்.
 
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், 'ஆடைத் தொழில் துறையுடன் ஏற்கனவே தொடர்புகொண்டுள்ள முன்னணி நுகர்வோர் வர்த்தக நாமங்களுடன் நாமும் ஓர் அங்கத்தவராக இணைவதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் JAAF அமைப்புக்கும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சுக்கும் வலுச்சேர்ப்பதன் மூலம் இந்த துறையை அதிகளவானோர் நாடும் துறையாக உயர்த்த தீர்மானித்துள்ளோம்' என்றார்.
 
இந்த நடவடிக்கையில் பங்காளர்களாக இணைந்து கொள்வதற்கு வாய்ப்பை வழங்கியமைக்காக JAAF அமைப்பின் செயலாளர் நாயகமான டூலி குரே அவர்களுக்கு தமது நன்றிகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், தமது வலையமைப்பில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்குரிய சகல வசதிகளும் காணப்படுவதாகவும் அவர் அமைச்சின் அதிகாரிகளுக்கு உறுதி மொழி வழங்கியிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .