2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

JASTECA விருதுகள் வழங்கும் நிகழ்வில் 'மஞ்சி சமக கமட சரண' திட்டம் பிரகாசிப்பு

A.P.Mathan   / 2014 மார்ச் 03 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டமான மஞ்சி சமக கமட சரண திட்டமானது அண்மையில் உள்நாடு மற்றும் வெளிநாடு உள்ளடங்கலாக மூன்று விருதுகளை வென்றெடுத்துள்ளது.

மஞ்சி சமக கமட சரண செயற்திட்டம் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட திட்டமாகும். வறுமையை ஒழித்து மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கக்கூடிய வகையில் மேம்படுத்துவதே இந்த சமூகம் சார்ந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

கடந்த 2008 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'மஞ்சி சமக கமட சரண' சமூக பொறுப்புணர்வு திட்டம் வட, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 40 மில்லியன் ரூபா முதலீட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு கட்டுமான அபிவிருத்திகளை மேற்கொள்ளும் 70 திட்டங்களின் ஊடாக சுமார் 400,000 இற்கும் மேற்பட்ட மக்கள் அனுகூலங்களை பெற்றுள்ளனர்.

மேலும் CBL மஞ்சி சமக கமட சரண திட்டம் அண்மையில் ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாச்சார சங்கத்தினால் (JASTECA) ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த விருதுகள் விழா 2013 இல் வெள்ளி விருதை தனதாக்கிக் கொண்டுள்ளது.

இவ்விருது CBL நிறுவனத்திற்கு ஒரு மைல்கல்லாகும். மஞ்சி சமக கமட சரண திட்டமானது வெளிநாட்டு அரசாங்கம் மற்றும் நிறுவனத்திடமிருந்து சர்வதேச அங்கீகாரத்தை பெறும் முதல்தடவை இதுவாகும். செயற்திட்டங்களின் உற்பத்தி திறன், செயற்திறன் மற்றும் நிலையான அபிவிருத்தி போன்றவற்றின் அடிப்படையில் JASTECA விருதுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

மேலும் இவ் விருதுக்காக போட்டியிட்ட நிறுவனங்களின் 50 இற்கும் மேற்பட்ட திட்டங்களை பின்தள்ளிவிட்டு மஞ்சி சமக கமட சரண திட்டம் இந்த விருதினை வென்றுள்ளது. மேலும் இந்த CSR செயற்திட்டத்திற்கு, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற SLIM சிறந்த வர்த்தகநாமங்கள் விருதுகள் நிகழ்வில் 'ஆண்டின் CSR வர்த்தகநாமம்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இலங்கை வர்த்தக சம்மேளனம் மூலம் ஒழுங்கு செய்யப்படும் சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலையாண்மை விருதுகள் 2013 நிகழ்வில் சிறந்த நிலையாண்மை திட்ட பிரிவின் கீழ் 'நீண்டகால திட்ட விருது' இனை இத் திட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விருது கட்டமைப்பானது சுற்றுச்சூழல் முகாமைத்துவம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு, ஊழியர் உறவுகள், வாடிக்கையாளர் தொடர்பு, சமூக தொடர்பு, உபசரிப்பு, நிதி செயற்பாடு மற்றும் பொருளாதார பங்களிப்பு போன்ற பிரிவுகளின் கீழ் உள்நாட்டு வணிக நிறுவனங்களிடையே CSR திட்டங்கள் மற்றும் நிலையான வணிக நடைமுறைகளை ஊக்குவித்து வருகிறது.

இலங்கையில் அனைத்து பிரிவினருக்கும் பொருளாதார மதிப்பு மற்றும் வளர்ச்சியை வழங்குவதற்கு CBL இன் பங்குதாரர்களுக்கு முக்கிய மூலோபாய வழிகாட்டல்களை வழங்கி வரும் மஞ்சி சமக கமட சரண திட்டம் கடந்த காலங்களில் பல்வேறு விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .