2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

'Laksala Museum Gallery Café' திறப்பு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் பழைமையானதும், அன்பளிப்பு மற்றும் நினைவுச்சுவடுகளை வடிவமைப்பதிலும் பிரபல்யம் பெற்ற லக்சல நிறுவனமானது அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் தமது புதிய காட்சியறையை அருங்காட்சியக வளாகத்தில் திறந்து வைத்தது. 'National Museum Gallery Café' எனும் அந்தஸ்தை கொண்ட இப் புதிய காட்சியறையை இந்த ஆக்கத்தின் தாபகரும், பிரதம விருந்தினருமான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இத் திறப்பு விழாவில் தேசிய உரிமைகளுக்கான அமைச்சர் ஜகத் பாலசூரிய மற்றும் தாவர பூங்கா மற்றும் பொது விநோத செயற்பாடுகளுக்கான அமைச்சர் ஜயரத்ன ஹேரத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.  
 
திவிநெகும சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்புதிய நவநாகரீக லக்சல காட்சியறையானது தேசிய அருட்காட்சியகத்தின் தேசிய பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய லக்சல காட்சியறையின் நிர்மாணப்பணிகளுக்காக அமைச்சரவை 220 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்ததுடன், ஏற்கனவே முதற்கட்ட நிர்மாண பணிகளுக்காக 185 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. எஞ்சிய நிலுவைத் தொகை எதிர்கால விரிவாக்கல்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இக் காட்சியறையில் நாடுபூராகவுமிருந்து கொண்டு வரப்பட்ட 30,000 இற்கும் அதிகமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் மர வேலைப்பாடுகள், பித்தளை வேலைப்பாடுகள், தோல் பொருட்கள், மட்பாண்டங்கள், பெற்றிக், கைத்தறி மற்றும் பல பொருட்கள் உள்ளடங்குகின்றன. இப் பொருட்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாங்குனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் லக்சலவில் விற்பனை செய்யப்படுகிறது. ஒய்வு பகுதி, Coffee Shop மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான உணவகங்களில் அமைந்துள்ள முழுமையாக குளிரூட்டப்பட்ட இவ் விற்பனை காட்சியறைகளில் கலாச்சார காட்சிப்பிரிவு, இரத்தினக்கல் காட்சியகம் போன்ற பல வசதிகள் காணப்படுகின்றன. 
 
இந் நிகழ்வில் லக்சல நிறுவனத்தின் தலைவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான அனில் கொஸ்வத்த கருத்து தெரிவிக்கையில், 'எமது நோக்கம், இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் நினைவுச்சுவடு தயாரிப்புகளுக்கு அதிகளவு நாடப்படும் பகுதியாக லக்சலவை திகழச் செய்வது ஆகும். எமது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கான முயற்சியாகவே இப் புதிய காட்சியறையை நாம் காண்கிறோம். இந்த விரிவாக்கல் செயற்பாடுகளை நாம் வெறுமனே தேசிய பொருளாதார வருவாய் உருவாக்கியாக கருதாமல் கிராமிய கைவினையாளர்கள் மற்றும் சிறியளவிலான விநியோகத்தர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவற்கான வழிமுறையாக கருதுகிறோம்' என தெரிவித்தார்.  
 
நிதி நெருக்கடிகள் மற்றும் மேலாண்மை பிரச்சனைகள் காரணமாக குறைந்த செயற்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்ட லக்சல நிறுவனமானது கடந்த 2008 ஆம் ஆண்டு செயல்படா அரச அமைப்பாக கருதப்பட்டது. இருப்பினும், லக்சல குழுவினர் கடந்த 2010 ஆம் ஆண்டில் 6 மில்லியன் ரூபா வருவாயையும், 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் முறையே 49 மில்லியன் ரூபா மற்றும் 65 மில்லியன் ரூபா வருவாயை பதிவு செய்திருந்தது. 2016 ஆம் ஆண்டிற்கான வருவாய் முன் மதிப்பீடு 200 மில்லியன் ரூபாவாகும்.
 
இலங்கையின் சுற்றுலாத்துறையின் ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டமானது 'மஹிந்த சிந்தனை' அரச கொள்கைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து பங்குதாரர்களினதும் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் கைவினைஞர், வடிவமைப்பாளர்கள், அழகுபடுத்துநர் மற்றும் மூலப்பொருள் சப்ளையர்கள் போன்றோரின் பொருளாதார அனுகூலங்களை உறுதிப்படுத்துவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பதுடன், இலங்கையின் பலவித நினைவுச்சுவடுகள் தொடர்பான ஓர் நிலையான விநியோகத்தின் தேவையுள்ளது. நாடுமுழுவதும் லக்சல நிறுவனங்களை நிறுவுவதன் ஊடாக இத் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
 
லக்சலவானது கிராமிய உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய சந்தையினுள் நுழைவதற்கான வாய்ப்பினை உருவாக்குவதன் ஊடாக இலங்கையின் அன்பளிப்பு மற்றும் நினைவுச்சுவடு துறையை அபிவிருத்தி செய்வதுடன், இலங்கையின் சுற்றுலாத்துறையையும் வலுவடையச் செய்துள்ளது. இலங்கையில் லக்சலவை பிரபல்யப்படுத்தும் நோக்கில் லக்சல குழுவினர் காலி மங்களா சுற்றுலா மையத்தில் புதிய காட்சியறையினை திறக்கவுள்ளதுடன், அடுத்த ஓரிரு மாதங்களில் கண்டியில் அமைந்துள்ள லக்சல காட்சியறையை புதுப்பிக்க தீர்மானித்துள்ளது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .