Editorial / 2020 ஜூலை 01 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொபிடெலின் பணக் கொடுப்பனவுக் கட்டமைப்பான mCash, ஒரு வருட காலப்பகுதிக்குள் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விருதுகளில், 2019ஆம் ஆண்டின் மிகவும் புகழ்பெற்ற கொடுப்பனவுகளுக்கான FinTech App விருதை LankaPay Technnovation விருதுகள் வழங்கும் நிகழ்வில் சுவீகரித்திருந்ததுடன், 2019 SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில், ஆண்டின் சிறந்த ஒன்லைன் வர்த்தக நாமத்துக்கான விருது, 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 வர்த்தக நாமங்களில் ஒன்றாக Brand Finance, LMD ஆகியவற்றால் தரப்படுத்தப்பட்டிருந்தது.
செயற்பாடுகளை ஆரம்பித்து தற்போது ஏழாவது ஆண்டில் இயங்கும் mCash, நிதிச் கொடுப்பனவுகளை ஏற்றக் கொள்ளல், ஆயிரக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றை மேற்கொள்கின்றது. இதனூடாக தேசத்துக்கு டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக வலுவூட்டிய வண்ணமுள்ளது.
புத்தாக்கமான தீர்வுகளினூடாக மொபைல் நிதிக் கொடுப்பனவு துறையில் தொடர்ச்சியாக mCash தன்னை முன்னிலையில் திகழச் செய்துள்ளதுடன், ஒரு வருட காலப்பகுதிக்குள் இந்தக் கௌரவிப்பு விருதுகளை வெற்றியீட்டி உள்ளமையானது, மக்கள் மத்தியில் அர்த்தமுள்ள வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர்த்துகின்றது.
உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் சேவைகளை வாடிக்கையாளர்கள், பங்காளர்களுக்குப் பெற்றுக் கொடுக்க mCash தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், துரித கதியில் இலங்கைக்கு டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
44 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago