
SLIIT கணினி பிரிவானது, ஐக்கிய இராச்சியத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான கீல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற திட்ட மேலாண்மை முதுமானி கற்கைநெறியை (MSc in Project Management) நடத்தவுள்ளது. இந்த 1 வருட முதுமானி கற்கையின் வகுப்புக்கள் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த திட்ட மேலாண்மை முதுமானி கற்கையானது வளர்ந்துவரும் தொழிற்துறையின் போட்டித்திறன், திறமைகள் மற்றும் அறிவு போன்ற கேள்விகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கீல் பல்கலைக்கழகத்தின் இந்த உயர் பட்டதாரி கற்கை மூலம் வழங்கப்படும் திட்ட மேலாண்மை நெறிமுறைகள் மற்றும் ஆற்றல் ஆகியன மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுப்பினும் பயனுள்ளதாகவே அமையும். 50 ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் கீல் பல்கலைக்கழகமானது உலகளவில் மூன்றாமிடத்திலும், தற்போது சண்டே டைம்ஸ் பல்கலைக்கழக லீக் தரவரிசை அட்டவணையில் 29வது இடத்திலும்; உள்ளது.
இக் கற்கையானது நவீன வணிக சூழலில் திட்ட மேலாளர் தனது பங்கினை சரிவர மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப மற்றும் செயல்முறை திறன்களை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக் கற்கையானது மாணவர்களிற்கு மக்கள் முகாமைத்துவம் மற்றும் குழு கட்டமைப்பிற்கு தேவையான நுண் திறன்களை வழங்குகிறது. எந்தவொரு துறையிலும் இளநிலை பட்டம் அல்லது பல ஆண்டுகால வேலை அனுபவம் ஆகியன இக்கற்கைக்கான தகைமைகளாக கொள்ளப்படுகிறது' என கீல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், முதுமானி பாடத்திட்டத்தின் பணிப்பாளருமான ஸ்டீவ் லிங்க்மேன் தெரிவித்தார்.
'இத் திட்டத்தின் ஓர் அங்கமாக, இறுதி அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட விளக்கவுரை அல்லது உள்ளகப் பயிற்சியை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். மரபு ரீதியான கற்பித்தல் அணுகுமுறையானது, மாணவர்களிற்கு கல்வி மற்றும் கோட்பாட்டு அம்சங்களை மையமாகக் கொண்ட கல்வியை மாத்திரமன்றி, நிஜ வாழ்க்கையில் தமது அறிவினை பிரயோகிக்கும் வகையிலான திறனை வழங்குகிறது' என SLIIT இன் சர்வதேச டீன் மருத்துவர் மஹேஷா கப்புருபண்டார தெரிவித்தார்.
நடைமுறை பயிற்சியானது வளங்களை பயன்படுத்தி முரண்பட்ட இலக்குகளை எதிர்கொண்டு பொருத்தமான நேரத்தில் சந்தை மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தியை ஏற்படுத்தும் வெற்றிகரமான திட்ட மேலாளர்களை உருவாக்குகிறது. இக் கற்கைநெறியின் ஒரு வருடத்தினுள் கணக்கியல் மற்றும் நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் செயல்முறை முகாமைத்துவம், மக்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான பிரச்சனை தீர்க்கும் திறன் ஆகிய பிரிவுகளின் கீழ் கற்கைகளை வழங்குகிறது. இக் கற்கைநெறிக்கான விண்ணப்பங்களை computing@sliit.lk எனும் இணையத்தளம் ஊடாக அல்லது SLIIT கணினிப் பிரிவின் கல்வி அலுவல்கள் பிரிவு,BOC டவர், கொழும்பு 3 எனும் முகவரி ஊடாக பெற முடியும். மேலதிக விபரங்களுக்கு 0772 665555/2301908 ஐ அழைக்கவும்.
