2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

SLIM NASCO விருது விழாவில் CBL நிறுவனத்திற்கு பல விருதுகள்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் உணவுத் துறையில் முன்னணி பெருநிறுவனங்களில் ஒன்றான சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனமானது, அண்மையில் நடைபெற்ற இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) வழங்கும் தேசிய விற்பனை காங்கிரஸ் விருது (NASCO) வழங்கும் நிகழ்வில் 5 விருதுகளை வென்று குவித்துள்ளது. துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் நுகர்வுப்பொருட்கள் (FMCG) பிரிவின் கீழ், CBL ஆனது விண்ணப்பித்த மூன்று துணை பிரிவுகளின் கீழும் விருதுகளை வென்றுள்ளது. 
 
சிறப்பான விற்பனை செயற்பாடு மற்றும் விற்பனை நிபுணர்களை ஊக்குவித்து வெகுமதிகளை வழங்கும் வகையில் அண்மையில் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இரு தங்க விருதுகள், ஒரு வெள்ளி விருது, இரு வெண்கல விருதுகளை CBL குழுவினர் வென்றெடுத்தனர்.
 
இந் நிகழ்வில் FMCG பிரிவில், ஆண்டின் மிகச்சிறந்த Front-Linerக்கான தங்க விருதினை மொஹம்மட் ரமிஸ் வென்றார். அவர் றிட்ஸ்பரி மற்றும் டியாரா தயாரிப்புகள் அடங்கிய CBL இன் A பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார். பிராந்திய முகாமையாளர் பட்டத்தை பெற்று இரண்டாவது தங்க விருதினை தம்மிக்க பெரேரா தட்டிச் சென்றார். லங்காசோய் மற்றும் சமபோஷ உள்ளடங்கிய C பிரிவில் மிகச்சிறந்த விற்பனை பிரதிநிதி மற்றும் மேற்பார்வையாளர் பட்டத்திற்கான வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை முறையே அசங்க ஹலங்கொட மற்றும் லங்கா ரஜீவ ஆகியோர் வென்றனர். மேலும் மஞ்சி தயாரிப்புகளின் B பிரிவில் கீழ், மிகச்சிறந்த பிராந்திய முகாமையாளருக்கான வெண்கல விருதினை ஜானக கொடகெதர வென்றெடுத்தார்.  
 
CBL குழுவினரின் சிறப்பான செயற்பாடு குறித்து நிறுவனத்தின் குழுமத்தின் விற்பனை பொது முகாமையாளர் ஐ.எம்.கார்ன் கருத்து தெரிவிக்கையில், 'இந் நிகழ்வில் விருதுகளை வென்றவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், இந்த சாதனையை நிதர்சனமாக்கிக் கொள்வதற்கு எமக்கு ஆதரவு மற்றும் ஊக்குவிப்புக்களை வழங்கிய அனைவருக்கும் நாம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உணவு துறையின் முன்னோடியாக CBL நிறுவனம் திகழ்வதற்கு நாடு முழுவதும் எமது வர்த்தகநாமத்தை கொண்டு சென்ற விற்பனை குழுவினரே பிரதான காரணமாகும். CBL ஆனது தொடர்ச்சியாக முன்னெடுத்த பயிற்சி திட்டங்கள் மற்றும் தொழில் மேம்பாட்டு முயற்சிகளின் பிரதிபலனாக, சுமார் ஒரு வருடத்திற்குள் எமது விற்பனை குழுவினர் நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்களை திறம்பட நிறைவேற்றியிருந்தனர்' என தெரிவித்தார்.
 
விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் உள்ள முன்னோடிகளை அடையாளப்படுத்தி வெகுமதிகளை வழங்குவதன் ஊடாக நாட்டில் விற்பனை தொழில்முறையின் தரத்தை உயர்த்துவதே NASCO வின் குறிக்கோளாகும். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .