2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

‘நாடாளுமன்றத்துக்குப் புலிகள் சென்றிருந்தால் போராட்டம் நிலைத்திருக்கும்’

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் நாடாளுமன்றத்தை அலங்கரித்திருப்பார்களேயிருந்தால், விடுதலை போராட்டம் நிலைத்திருக்குமெனத் தெரிவித்த ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் க.துஷ்யந்தன், அதன்மூலம் ஏதோ ஒரு விதத்திலாவது, தாங்கள் வெற்றியைப் பெற்றிருப்போமெனவும் கூறினார்.

வவுனியாவில், இன்று (08) நடைபெற்ற கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமது கைகளில் அதிகாரம் இல்லாததாலேயே, இன்று தாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறதெனவும் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் இளைஞர்கள் விடயத்தில் பின்வாங்கியே நிற்கிறார்களெனவும் சாடினார்.

எனவே, ஏனைய இனங்களால் ஏற்படும் அடக்குமுறைகளின் போது, தாங்கள் தமிழர்கள் என்று சொல்லி நிமிர்ந்து நிற்கும் சூழலை இளைஞர்களே உருவாக்க வேண்டுமெனவும், அவர் கூறினார்.

 அத்துடன், வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளில் அரசியல் புரட்சியை ஏற்படுத்தி, அதன்மூலமான எட்டப்படும் தேர்தல் வெற்றியினூடாக, தமது பிரச்சினைகளை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமெனவும், துஷ்யந்தன் தெரிவித்தார்.

மேலும், தற்போது அமைந்திருக்கின்ற அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து, தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதே ஒரே வழியெனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .