2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

பிரதமர் - மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சந்திப்பு

George   / 2017 மே 20 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பிரதமர் ரணில் விக்கிரமசிங், ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அதிகார சபையினருக்கிடையில், மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மதியம் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 305 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4  மாடிக்கட்டடத்தொகுதியின் திறப்பு விழா நிகழ்வு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் நேற்று இடம்பெற்றது

அதனைத் தொடர்ந்து, இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, கட்சியின் செயற்பாடுகள் குறித்து பிரதமருடன் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .