2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

பூர்வாங்கப் பணிகள் இடம்பெறாமையால் புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம் ஒத்திவைப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

பதிவுகளை மேற்கொள்ளல் முதலான பூர்வாங்கப் பணிகள் இடம்பெறாமையால் புதுக்குடியிருப்பில் இன்று மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று புதுக்குடியிருப்பு  பிரதேச செயலர் கே.தயானந்தா தமிழ்மிரர் இணையத்தளத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பிரதேச செயலர் தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பு விசுவமடுப் பகுதியில் இன்று 409 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படவிருந்தன.

இந்நிலையில் பதிவு முதலான பூர்வாங்கப் பணிகள் எவையும் நிறைவடையவில்லை. இதனால் இவர்களின் மீள்குடியேற்றப் பணிகள் நாளைய தினத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இங்கு மீள்குடியேற்றுவதற்கென வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்துவரப்படும் மக்களை புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் இன்று தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை முற்பகல் 10 மணி தொடக்கம் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பிக்கப்படும். நாளை மறுதினம்வரை இந்தப் பணிகள் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. – என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .