2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

யுத்தத்தால் சேதமடைந்த வன்னிப் பாடசாலைகளைப் புனரமைக்க இந்திய அரசு நிதியுதவி

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தத்தால் பாதிப்படைந்த பாடசாலைகளைப் புனரமைக்க இந்திய அரசு நிதியுதவி வழங்கவுள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, இந்திய அரசிடம் இவ்விடயம் தொடர்பாக விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்நிதியை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது.

ஜனவரி மாதமளவில் இதற்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .