2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

இ.போ.ச.மன்னார் சாலை பணியாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)
             
இலங்கை போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய பொது முகாமையாளர் நியமனத்தில் அநீதி ஏற்பட்டுள்ளதாக கூறி இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலைக்கான பணியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அலுவலர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரிதும் கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களை சந்தித்து உரையாடினார்.

இந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் தலைமை அலுவலகத்தில் இருந்து உறுதிமொழி ஒன்று கிடைத்துள்ளதாகவும் அதில் இம்மாதம் 08ஆம் திகதிக்கு முன்னர் நேர்முகப்பரிட்சை வைத்து தகுதியான ஒருவர் தெரிவு செய்யப்படுவர் என அறிவித்திருந்ததாகவும் அதனைத் தொடர்ந்து பனிப்பகிஸ்கரிப்பை கைவிட்டதாகவும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது போக்கு வரத்துச் சேவைகள் வழமைக்குத்திரும்பியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .