2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

மன்னாரில் கடும் வெப்பம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில் வெப்பம்  அதிகரித்துக் காணப்படுவதால், அங்கு வரட்சியான காலநிலை நிலவுவதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களிலும் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களிலும் கடும் வெப்பம் காரணமாக குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மீள்குடியேற்றப்பட்ட  மக்கள் நீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேற்படி இரு கிராம மக்களின் நலன் கருதி குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கும் முகமாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் 20 குழாய்க்கிணறுகளை அமைத்துக் கொடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .