2021 ஜூன் 16, புதன்கிழமை

பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் முகமாக மன்னாரில் விழிப்புணர்வு நிகழ்வு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறைகளை ஒழிக்கும் முகமாக யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதி உதவியுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்வொண்று இன்று செவ்வாய்க்கிழமை மன்னாரில் இடம்பெற்றது.

மாத்தறையில் இருந்து 30 இளைஞர், யுவதிகளும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தஇளைஞர் யுவதிகளும் இணைந்து மன்னார் பஸார் பகுதியில் குறித்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர். இதில் மன்னார், நாணாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

இதன் போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பி.பூலோகராஜா, மன்னார் நகர இளைஞர் சேவை அதிகாரி ஏ.டியூக் குரூஸ், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி தவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு முன்பாக ஆரம்பித்த இளைஞர் யுவதிகளின்  கலந்து கொண்ட பேரணி, பிரதான வீதியூடாக சென்று மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .