2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அக்கராயன் வைத்தியசாலை மாறாது

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்   

தேசிய பேரிடர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்மைவாக, அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையை, கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான  வைத்தியசாலையாக மாற்றுவதற்கு, மத்திய சுகாதார அமைச்சு தடைவிதித்துள்ளது.

இதற்கமைய, இந்த மாற்று முடிவைக் கைவிடுமாறு, வடக்கு மாகாணச் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு, சுகாதார அமைச்சு நேற்று  (24) அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளை, அண்மையில் நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடிய கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சரவணபவன், பொதுமக்களால் வழங்கப்பட்ட கோரிக்கைகள், மாவட்டச் செயலாளரால் வழங்கப்பட்ட அறிக்கை என்பவற்றுடன் தமது பிரத்தியேக அறிக்கையையும் இணைத்து கையளித்து, விளக்கம் அளித்ததைத் தொடர்ந்தே, மத்திய சுகாதார அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .