2025 மே 17, சனிக்கிழமை

அஞ்சல் அலுவலகத்தில் திருட்டு முயற்சி

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி - பரந்தன் அஞ்சல் அலுவலகத்தில், திருட்டு முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜூன் 2ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு பூட்டப்பட்ட தபாலகத்தை, மீண்டும் இன்று (08) காலை கடமைகளுக்காக திறந்த போதே, பாதுகாப்பு பெட்டகம் கோடாரி கொண்டு உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பெறுமதியான எந்தப் பொருள்களும் திருடர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கவில்லை. சம்பவ இடத்தில் இருந்து கோடாரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .