Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - துணுக்காய் - உயிலங்குளத்தின் அணைக்கட்டை புனரமைப்பதற்கு நான்கு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, துணுக்காய் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.பிரபாகரன் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
துணுக்காயில் இருந்து அம்பலப்பெருமாள்குளம் கிராமத்துக்குச் செல்கின்ற வீதி உயிலங்குளம் அணைக்கட்டின் மேலாக அமைந்துள்ளது. இக்குளத்தின் கீழே வீதி அமைய வேண்டும். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் குளத்தின் அணைக்கட்டு சேதமடைந்த நிலையில், இக்குளத்தின் அணைக்கட்டின் மீதான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்ட நிலையில், தற்காலிக புனரமைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது போக்குவரத்துகள் இடம்பெறுகின்றன.
மழை காலத்தில் இந்த அணைக்கட்டின் மீதான போக்குவரத்து அபாயமான மாறிவிடும். இந்நிலையில் கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ், துணுக்காய் பிரதேச செயலகத்துக்குக் கிடைக்கப் பெற்ற.இருபது மில்லியன் ரூபாயில் நான்கு மில்லியன் ரூபாயை குளத்தின் அணைக்கட்டின் புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி கிடைத்தவுடன் துணுக்காய் கமநல சேவை நிலையம், அணைக்கட்டின் புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.
4 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
48 minute ago