Niroshini / 2021 ஜூன் 24 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தில். தாய், தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கி, வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுயன்சன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், போர் காலத்தில் பெருமளவிலான பிள்ளைகள் தாய். தந்தை இருவரையும் இழந்து, உறவினர்கள் வீடுகளிலும் உதவி இல்லங்களிலும் வாழ்ந்து வருகின்றனரென்றார்.
இந்நிலையில் வழங்கப்படுகின்ற வீட்டுத் திட்டங்களை, தாய் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.
குறிப்பாக தாய், தந்தையற்ற பெண் பிள்ளைகளுக்கு வீட்டுத் திட்டம் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ச.சுயன்சன் தெரிவித்தார்.
52 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
57 minute ago
2 hours ago