Freelancer / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெம்பர்ட்
முசலி - கஜிவத்தை பகுதியில் காணப்பட்ட புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் உள்ள தூய அந்தோனியார் திருச் சொரூபங்கள் இரண்டு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் நேற்று மாலை ஆராதனைகளை மேற்கொள்ள கொக்குப்படையான் கிராம மக்கள் சென்றிருந்தனர்.
இதன் போது குறித்த சிற்றாலயத்தில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 மற்றும் 3 அடி உயரம் கொண்ட அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து உடனடியாக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். (R)

26 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
40 minute ago
1 hours ago
2 hours ago