2025 மே 21, புதன்கிழமை

அனந்திக்கு குறிவைக்கும் டெனீஸ்வரன்

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பில், வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளதாக, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புத் தொடர்பில், இன்று (20) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இன்று எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெலிஓயா பகுதியில் உள்ள குளம் ஒன்றில், மீன்குஞ்சு விடப்பட்டமையில் மோசடி இடம்பெற்றதாகவும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைளின் போதும் பஸ் தரிப்பிடம் அமைக்கும் போதும் மோசடி இடம்பெற்றதாகவும், மாவீரர், போராளிகளுக்கான வேலைத்திட்டத்தில் ஊழல் நடந்ததாககவும் குறிப்பிட்டு, அனந்தி சசிதரன் தனக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

இவற்றுக்கு எல்லாம் தான் விசாரணைக் குழுவில் சரியான விளக்கம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், மாவீரர், போராளிகள் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளில், ஒரு ரூபாய் என்றாலும் தான் எடுத்தேன் என்று நிரூபித்தால், தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் கூறினார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி அந்த நிதிப் பிரமாணங்களுக்கு அமைய, வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் ஊடாகவே செலவு செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், இவை எல்லாவற்றுக்கும் தான் சரியாக பதில் அளித்தப் பின்னரும் தனக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டுகளை சுமத்திய உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் கூறினார்.

அனந்தி சசிதரன் செய்த முறைப்பாடு பொய் என்பதை விசாரணைக் குழு தெரிவித்துள்ளதாகவும் இந்நிலையில், அவதூறு ஏற்படுத்தியமை தொடர்பில் அனந்தி சசிதரனுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .