Editorial / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கற்சிலைமடுப் பகுதியில், நேற்று (14) வீதி அனுமதி இன்றி தண்டுவான் பகுதிக்கு உழவு இயந்திரம் மூலம் கொண்டு செல்லப்பட்ட கள் போத்தல்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கற்சிலை மடுப் பகுதியில் உள்ள கள் அடைக்கும் நிலையத்தில் இருந்து 720 கள் போத்தல்களை உழவு இயந்திரத்தில் தண்டுவான் நோக்கி கொண்டு சென்ற போதே, முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட பெருங்குற்றப்பிரிவு மது ஒழிப்பு போதைத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரையும் கள் போத்தல்களையும் இன்று (15) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
1 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago