2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘அரசமைப்பை மாற்றியமைக்க வேண்டும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இந்த நாட்டில் சுதந்திரமாக தமது மதங்களை பின்பற்ற முடிவதில்லையெனத் தெரிவித்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், ஆகவே, தற்போதிருக்கும் அரசமைப்பை மாற்றியமைக்க வேண்டுமெனவும் கூறினார்.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் சோரன்பற்று சீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கான மடப்பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வௌ்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், உண்மையில் ஒரு ஜனநாயக பண்புகளைக் கொண்ட நாட்டில் குறித்த ஒரு மதத்தை முன்னுரிமைப்படுத்தியோ அல்லது  அந்த மதத்துக்குச் சார்பாகவோ  அந்த நாட்டினுடைய அரசமைப்பு காணப்படக் கூடாதெனவும் தெரிவித்தார்.

அவ்வாறு ஒரு மதத்துக்கு சார்பாக அந்த நாட்டினுடைய அரசமைப்பு காணப்படுமாக இருந்தா,ல் அங்கு ஏனைய மதங்களைப் பின்பற்றுவதற்கு பூரண சுதந்திரம் காணப்படாதெனத் தெரிவித்த அவர்,  எனவே இந்த நாட்டினுடைய அரசமைப்பு முற்றாக மாற்றப்பட்டு, சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சகல மதங்களையும் சமத்துவமாக கருதக் கூடிய ஓர் அரசமைப்பை எருவாக்க வேண்டுமெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .