2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அரசர்கேணிக்கு விரைந்த ஜேர்மான் குழுவினர்

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, அரசர்கேணிப் பகுதியில், ஜேர்மன் நாட்டின்; நிதியுதவியுடன் டாஸ் நிறுவனத்தால் முனனெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை, இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர், இன்று (17) பார்வையிட்டனர்.

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை, அரசர்கேணி ஆகிய பகுதிகளில் சர்வதேச நிறுவனங்களின் நிதி உதவியுடன் டாஸ் மனித நேயகண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தால் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, இந்தக் கண்ணிவெடி அகற்றும் பணிகளை, இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர், இன்று (17) அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த பகுதிகளின் நிலைமைகள் தொடர்பிலும் வெடிபொருள்களை அகற்றும் பணிகளின் போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும், அகுழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.

குறித்த பகுதிகளில், 28 வரையான பணியாளர்களைக் கொண்டு நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .