Niroshini / 2021 ஜூலை 15 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்
தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களை விடுவிக்காவிடின் இதனிலும் விட பாரிய செயற்பாட்டுக்கு செல்லவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 08ஆம் திகதியன்று, கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு, கேப்பாப்புலவில் உள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள், தனிமைப்படுத்தல் கண்காணிப்பில் இருந்து கொண்டு தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றும் (14) தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் சுகாதார வழிமுறைகளைப் பயன்படுத்தி, மக்களின் போராட்டங்களை நசுக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், அவர் கூறினார்.
மக்களுடன் தாங்களும் இணைந்து, இந்த நாட்டில் ஜனநாயகம் சுதந்திரத்தை வெல்வதற்காக போராடுவோம் என்றும், அவர் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago