2025 மே 17, சனிக்கிழமை

‘அரச தொழில் வாய்ப்புகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம்’

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச தொழில் வாய்ப்புகளின் போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென்று, அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அண்மையில், முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்புகளின் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரச தொழில் வாய்ப்புகளின் போது கோரப்படும் தகுதி நிலைகளில், சற்று தளர்வைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று, அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வன்னி மண்ணை வளம் கொழிக்கும் பிரதேசமாக மாற்றும் முயற்சியின் ஒரு கட்டமாக, அங்கு காணப்படுகின்ற நன்னீர், உவர் நீர் நிலைகளை அபிவிருத்தி செய்து, நீர் வேளாண்மையை விருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அமைச்சர் டக்ளஸ் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .