2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அரியவகை விலங்குடன் ஒருவர் கைது

Freelancer   / 2022 டிசெம்பர் 17 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காடுகளில் வாழும் அரியவகை மிருகங்களில் ஒன்றான பாரிய அழுங்கினை இறைச்சிக்காக பிடித்து சென்றவரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் தேராங்கண்டல் பகுதியில்  இறைச்சிக்கு பயன்படுத்த  இருந்த நிலையில் இருந்த ஆமடில்லா (அழுங்கு) என்று அழைக்கப்படும் காட்டு விலங்கு கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் உயிருடன்  மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து துணுக்காய்  தேராங்கண்டல் பகுதியில் சந்தேக நபர் ஒருவரின் வீட்டை   சோதனை செய்த போது குறித்த காட்டு விலங்கு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கை செய்யப்பட்டுள்ள 40 வயதுடைய  சந்தேக நபரை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள்  திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X