2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அறநெறி பாடசாலை திறந்து வைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - தரணிக்குளம் பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸவால் திறந்து வைக்கப்பட்டது.

தரணிக்குளம் மக்களின் நீண்ட கால தேவையாக அறநெறி பாடசாலை காணப்பட்டு வந்தது. இதனை கருத்திற்கொண்டு வீடமைப்பு, கலாசார  அமைச்சின் 04 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பால விநாயகர் கோவில் அறநெறி பாடசாலை, இன்று காலை அமைச்சர் சஜித் பிரேமதாஸவால் திறந்து வைக்கப்பட்டது.

தரணிக்குளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் இ.ராகுலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வவுனியா மாவட்டச் செயலாளர் ஐ.எம்.ஹனீபா, பிரதேச செயலாளர் கா.உதயராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .