Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வவுனியா பிரதேச செயலகத்தினுள் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும் என பிரதேச செயலர் அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடமாகாண இணைப்பாளர் த. கனகராஜ் எழுத்து மூலமான விளக்கம் கோரியுள்ளதாக அறியமுடிகிறது.
வவுனியா பிரதேச செயலகத்தினுள் சேவை பெற வருவோர் அடையாள அட்டையையும் தடுப்பூசி அட்டையையும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதோர் பிரதேச செயலகத்தினுள் அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள் என்றும், வவுனியா பிரதேச செயலக நுழைலாயிலில், அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அது தொடர்பில் எழுத்து மூலமான விளக்கத்தை, பிரதேச செயலாளரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடமாகாண இணைப்பாளர் த. கனகராஜ் கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
41 minute ago