Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 07 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடச்சியாக இந்திய தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைப்படகுகள் அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை கடந்த காலங்களில் மீனவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், நேற்று முல்லைத்தீவு அளம்பில் கடல்பகுதியில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு சொந்தமான கடல் எல்லைக்குள் சட்டவிரோதமான முறையில் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக இழுவைப்படகு ஒன்று தொடர்பில் கடற்படையின் கிழக்கு கடற்படை தலைமையகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலுக்கு அமைய கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் அத்துமீறி கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 12 பேர் அடங்கிய குழுவை இழுவை படகு ஒன்றுடன் கைதுசெய்துள்ளார்கள்.
குறிப்பிட்ட 12 தமிழக மீனவர்களும் அவர்களின் மீன்பிடி படகும், படகில் இருந்த மீன்பிடி சாதனங்களும் திருகோணமலை கடற்படைதளம் கொண்டுசெல்லப்பட்டு அங்கு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளார்கள். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago