Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மடு திருத்தலத்தின் ஆணி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக அவசர மீளாய்வுக் கூட்டம், இன்றுக் காலை 11 மணியளவில் மடு ஜோசப்வாஸ் கோட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மடு பிரதேசச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் பிரதி நிதிகள், இராணுவம், பொலிஸ், கடற்படை அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
குறிப்பாக மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா, கடந்த 6ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன், ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி காலை 6.15 மணிக்குத் திருவிழா திருப்பலியுடன் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், மடு திருத்தலத்துக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வேண்டிய அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள், குடி நீர், சுகாதாரம், மருத்துவம் உட்பட பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மடு திருத்தலத்துக்கு வரும் பக்தர்களின் நலனையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்தும் வகையில், பொலிஸ், இராணுவம், கடற்படையினர் இணைந்து மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, மடு திருத்தலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago