Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.என். நிபோஜன் / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் ஊற்றுப்புலம் பழைய குடியிருப்புக்கான பிரதான பாதை துண்டிக்கப்படும் ஆபத்து காணப்படுகிறது.
ஊற்றுப்புலம் பிரதான பாதை நீரால் அரிக்கப்பட்டு காணப்படுகிறது.
புதுமுறிப்பு குளம் புனரமைக்கப்பட்டு உயர்த்தப்பட்டு நீர் கொள்ளளவு அதிகரிக்கப்பட்ட நிலையில் குளத்தின் பின்பகுதியான ஊற்றுப்புலம் பிரதேசத்தில் நீர் நிறைந்து காணப்படுகிறது. இந்த நீரேந்து பகுதியை ஊடறுத்து ஊற்றுப்புலம் பிரதான பாதை உள்ளது.
குறித்த பாதை நீரால் அரிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
குறித்த பாதை துண்டிக்கப்படும் பட்சத்தில் ஊற்றுப்புலம் கிராமத்தின் பழைய குடியிருப்பில் வாழும் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.
எனவே உடனடியாக உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago