எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து மன்னாருக்கு வருகை தந்த குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மன்னார் எமிழ் நகர் பகுதியில் உள்ள வீட்டு சமையலறை பகுதியில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.
குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னாருக்கு வருகை தந்த அவர்கள், மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று நேற்று திங்கட்கிழமை (29) மாலை குறித்த வீட்டுக்கு விசேட அதிரடிப்படையுடன் சென்று சோதனைகளை மேற்கொண்டதோடு, குறித்த வீட்டின் சமையல் அறைப்பகுதியையும் கடுமையாக தோண்டி சோதனையிட்டனர்.
மாலை 7 மணிவரை தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் எவ்வித வெடிபொருட்களும் கண்டு பிடிக்கப்படவில்லை.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago