Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் ஆலோசனைப் பெற்ற பின்னரே, கட்டுக்கரைப் பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் தொடர்பில் நிரந்தரத் தீர்வு காணப்படுமென்று, நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்திலுள்ள பர அரச காணிகளுக்கு திணைக்களக்களங்களும் உரிமை கொண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கட்டுக்கரைப் பகுதியில், கால்நடைமேய்ச்சல் நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலும் இதே நிலைமையே காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆகவே, தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உட்பட்ட அனைத்துத் திணைக்களங்களினதும் ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் பெற்றபின்னரே கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை அடையாளப்படுத்தி, நிரந்தர தீர்வு காண்பதே சிறந்தவழியெனவும், அவர் கூறினார்.
இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மன்னார் மாவட்டக் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்துக்கு, கட்டுக்கரைக்குளப் பகுதியை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இணைத் தலைவர்களால் மன்னார் மாவட்டச் செயலாளருக்குப் பணிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், அதற்கமைவாக அந்தப் பகுதியிலுள்ள காணிகள் குறித்து அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அப்பகுதிகளில் உள்ள காணிகளின் விவரங்களைச் சேகரித்து, அத்தரவுகளை பிரதேச செயலகத்துக்குச் சமர்ப்பிப்பதற்கும் சர்ச்சைக்குரிய காணிகளில் மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்கைகளை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago