2025 மே 17, சனிக்கிழமை

ஆளுநரிடம் உடையார்கட்டு விவசாயிகள் கோரிக்கை

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வடமாகாண ஆளுநர், ஒட்டுசுட்டான் பகுதியில் அமையப்பெற்ற முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியிலாளர் அலுவலகத்தை நேற்று (17) திறந்து வைத்தார்.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு விவசாயிகள் சார்பிலான மகஜர் ஒன்று கமக்கார அமைப்பின் தலைவரால் வடமாகாணா ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

உடையார் கட்டு குளத்திற்கு கீழ் 4,000க்கும் அதிகமான விவசாய நிலப்பரப்பில் விவசாயம் செய்துவரும் விவசாயிகள் ஒருபோகத்துக்கு பத்து கோடி ரூபாய்க்கும் அதிகளவில் நெல்லை விற்பனை செய்து வருகின்றார்கள்.

இந்நிலையில் இந்த விவாசாயிகள் வங்கி நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தால், புதுக்குடியிருப்புக்குதான் செல்லவேண்டும் கடந்த ஐந்து ஆண்டுகளாக உடையார்கட்டுப் பகுதிக்கு வங்கியும் எரிபொருள் நிரப்பு நிலையமும் பெற்று தருவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏமாற்றிவிட்டார் 

இந்நிலையில் இனியாவது மக்களின் நிலை அறிந்து உடையார் கட்டு பகுதியில் விவசாயிகளின் நன்மை கருதி வங்கி சேவை ஒன்றை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .