2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஆளுநரின் கூட்டத்துக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

Niroshini   / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-. அகரன்

வவுனியா பல்கலைக்கழகத்தில், வடமாகாண ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை செய்தி சேகரிப்பதற்கு, ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக சமூகம் மற்றும் வவுனியா கல்வியியலாளர் சமூகத்துடன், வடமாகாண ஆளுநர் சந்திப்பொன்றை, இன்று (15) மேற்கொண்டிருந்தார். 

இதன்போது, ஊடகங்கள் செய்தி சேகரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில், வவுனியா  பல்கலைக்கழகத்துக்கு ஊடகவியலாளர்கள் சென்ற போதிலும், அங்கிருந்த காவலர்கள் கூட்டம் இடம்பெற்ற மண்டபத்தினுள் செல்ல அனுமதி மறுத்திருந்தனர். 

எனினும், கூட்டம் நிறைவடைந்த பின்னர், ஆளுநரை ஊடகவியலாளர்கள் அணுகி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கேட்டபோது, பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் துணைவேந்தரிடம் கேட்குமாறும் தெரிவித்துவிட்டு சென்றிருந்தார். 

இந்நிலையில், ஊடகவியலாளர்களை கூட்டம் இடம்பெறும் மண்டபத்துக்குள் செல்ல, ஆளுநரை காரணம் காட்டி, பல்கலைக்கழகப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தடையை ஏற்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .