Editorial / 2022 மார்ச் 07 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களில் உள்ள பல பாடசாலைகளில் அதிபர்கள் 07 வருடங்களை கடந்தும் இடமாற்றம் வழங்கப்படாது தொடர்ந்தும் கடமையாற்றி வருகின்றனர் என பாதிக்கப்பட்டுள்ள அதிபர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வழமையான இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனை விரைவாக மேற்கொள்ள மாகாண மற்றும் வலய கல்வி திணைக்களங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜனை தொடர்புகொண்டு வினவிய போது, 07 வருடங்களை பூர்த்தி செய்த அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் கவனத்துக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago