2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இடம்மாறி இறங்கிய ஹெலியால் பதற்றம்

George   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொது விளையாட்டரங்கில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை மதியம் தரை இறங்க வேண்டிய அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்கள் பயணித்த ஹெலிகொப்டர்,  விமானியின் கவனயீனம் காரணமாக மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் தரையிறக்கப்பட்டது.

திடீரென ஹெலிகொப்டரொன்று தரையிறங்கியதால் குறித்த பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது. அதனையடுத்து, விமானி மீண்டும் மன்னார் பொது விளையாட்டரங்கில் ஹெலிகொப்டரை தரையிறக்கியுள்ளார்.

இந்த நிலையில், மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் விரைந்து சென்று மேலதிக நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தனர்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் சவூதி அரோபிய நாட்டவர்கள் குறித்த ஹெலிகொப்டரில் பயணித்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட   விடத்தல் தீவு கிராமத்தில் சவூதி அரோபிய நாட்டு தனவந்தர்களின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 50 வீடுகள் கையளிக்கப்படும் வைபவம்  காலை 10 மணியளவில் நடைபெற்றது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் குறித்த வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .