2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இது நியாயமான செயலா?

Freelancer   / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பல்லவராயன்கட்டுக்கும் வலைப்பாட்டிற்கும் இடையில் பயணிக்கின்ற சில தனியார் பேருந்துகள் பயணிகளுக்கான பயணச் சிட்டைகள் வழங்குவதில்லை என பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சி.சிறிரஞ்சன் தெரிவித்தார். 

12 கிலோ மீற்றர் தூரம் இடைவெளி காணப்படுகின்ற இத் தூர பயணத்திற்கு, சில தனியார் பேருந்துகள் சிட்டைகள் வழங்குவதில்லை. அதற்குரிய காரணம் 200 ரூபாய் வரை அதிக பணம் பயணிகளிடம் அறவிடப்படுகின்றது. 

இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து சங்கத் தலைவரிடம் தொடர்பு கொண்டு விடயத்தினை தெரிவித்த போது,

பயணிகள் சிட்டைகள் வழங்காமல் அதிக பணம் அறவீடு செய்யப்பட்டால் அது பிழையான விடயம். இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களாக காணப்படுகின்ற கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு ஆகிய கிராமங்களில் 1,000 வரையான குடும்பங்கள் வாழ்கின்றன.  

இக்கிராமங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் பணியில் ஈடுபடாததன் காரணமாக தனியார் பேருந்துகளே கூடுதலாக பணியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .