Editorial / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
இந்தியக் கடற்பரப்பில் வைத்து, நேற்று (15), மன்னார் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்திய கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில், இந்திய விசை படகொன்றும், 3 இலங்கைப் படகுகளும் காணப்பட்டதை அவதானித்த அந்நாட்டு கடற்படையினர், அவர்களிடம் விசாரணை செய்ய முற்பட்டனர்.
இதன்போது, இந்தியப் படகு அங்கிருந்த தப்பி சென்றது.
இதையடுத்து, இலங்கைப் படகுகளில் இருந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், இலங்கையில் இருந்த கடத்தல் பொருள்களுடன் வந்தனரா என்ற கோணத்தில், பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
9 hours ago