Freelancer / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 8 பேர் தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
செவ்வாய்க்கிழமை(13) இரவு பேசாலை-தலைமன்னார் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 3 இளைஞர்களும், பெண்களும்,18 வயதிற்கு குறைவான 3 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் கடற்படை ஊடாக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பேசாலை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று புதன்கிழமை(14) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 18 வயதிற்கு மேற்பட்ட 5 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும்,ஏனைய 18 வயதுக்கு குறைந்த 3 பேரையும் நிபந்தனைகள் இன்றி விடுதலை செய்தார்.
மீண்டும் குறித்த விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி (14-12-2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. (R)
5 minute ago
11 minute ago
14 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
14 minute ago
24 minute ago